Wednesday, May 15, 2024
Homeசெய்திகள்அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணம் அச்சிடுவதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே குறித்த தொகையை சேமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments