Thursday, May 2, 2024
Home Blog Page 2

இலங்கையின் சுதந்திர நாளன்று பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலமை!

இன்று இலங்கையின் சுதந்திர நாளன்று இலங்கையின் சுதந்திரதினத்திற்கு எதிரொலியாக புலம்பெயர் தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் ஓருமித்தி தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியுள்ளனர் .

இவற்றுள் இன்று பிரித்தானியாவில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்அனைவரும் ஓன்றுகூடி காலை 11மணிக்கு ஸ்ரீலங்கா தூதுவரகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்து பிரித்தானியா பாராளுமன்றம் வரையாக மாலை 4 மணிவரை போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தில் பெருமளவான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கான தகவல் !

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக தற்போது பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலக்க தகடுகளை பயன்படுத்தி கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாற்றப்படும் எழுத்துகள் மற்றும் இலக்கங்கள்
ஆனால் உள்நாட்டில் எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் மாற்றப்படுவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சில அதிகாரிகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் இலக்கங்களை மனப்பாடம் செய்து சோதனைகளில் தேர்ச்சி பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது காட்சிப்படுத்தப்பட்டு அதற்கேற்ப சோதனைகள் நடத்தப்படும்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நுகேகொட மற்றும் வெரஹெர ஆகிய கிளைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 24 மாவட்ட அலுவலகங்களிலும் இதே வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்குமான அறிவிப்பு !

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தமது வருடாந்த நிதி அறிக்கைகளை பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வருடாந்த நிதிநிலை அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் சுருக்க அறிக்கை அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு 3 மாதங்கள் போதுமானது எனவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒடிட்டர் ஜெனரலின் சுருக்க அறிக்கை, ஆண்டு நிதிநிலை அறிக்கையுடன் மே 31க்கு முன் வெளியிடப்படும் எனவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்குமான அறிவிப்பு !
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்குமான அறிவிப்பு !

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து !

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தை சேதப்படுத்திய பின் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் நேற்று சனிக்கிழமை (27) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பஸ் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து !
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து !

இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

மன்னாரில் 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது !

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹாரத்தின் ஆலோசனையின் பெயரில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் செளத்பார் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலைய பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அக்கரைப்பற்றில் பட்டப்பகலில் 14 பவுண் தங்க நகைகள் கொள்ளை !

அக்கரைப்பற்றில் பட்டப்பகலில் 14 பவுண் தங்க நகைகள் கொள்ளை !

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (26) பட்டப்பகலில் 14 பவுண் மதிக்கத்தக்க தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் தொழிலுக்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவ தினமான இன்று வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதேநேரம் வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்றுள்ளதை அவதானித்து அயலவர்களின் உதவியை கோரியுள்ளார்.

ஆயினும் வீட்டின் அலுமாரியில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வீட்டின் உரிமையாளர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த குண்டுகள் மீட்பு !

மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த குண்டுகள் மீட்பு !

மட்டக்ககளப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் அகப்பட்டுள்ளன.

அதனை அவதானித்த குறித்த மீனவர் களுவாஞ்சிகுடி பொஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டார் சென்ற இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்று 26 ஆவது நாளில் வாகன விபத்தொன்றில் சிக்கி, யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் டிபில்ஸ்குமார் துவிகரன் (வயது 24) என்ற ஒரு பெண்பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய், மனோகரா பகுதியைச் சேர்ந்த இவர் நவகிரியை சொந்த இடமாக கொண்டவர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டு அல்வாயில் வசித்து வந்தார்.

இவர் தொழிலுக்காக கட்டார் சென்று 26 நாட்களேயான நிலையில், அந்நாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அவரது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று (24) இறுதிக்கிரியைகளை தொடர்ந்து தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.

இந்த இரண்டு புதிய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மற்றும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒரு வருடத்திற்கு 20-25 கிலோ மாதுளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ. ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் ரூபாய் என்றார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் மாதுளை வகைகள் இன்று கையளிக்கப்பட்டன

இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

டுவிட்டர் – லிங்க்டின் பயனர்களின் 26 பில்லியன் தனிப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது

டுவிட்டர் மற்றும் லிங்க்டின்(Linkedin) ஆகிய செயலிகளில் போதுமான பாதுகாப்பு இல்லாத கணக்குகளில் இருந்து 26 பில்லியன் தகவல்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 26 பில்லியன் கசிந்த பதிவுகளைக் கொண்ட ஒரு பெரிய தரவுத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செக்யூரிட்டி டிஸ்கவரி மற்றும் சைபர்நியூஸ் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே தகவல் கசிவு தொடர்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் கசிவு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, லிங்க்ட்இன் செய்தித் தொடர்பாளர், “இந்த உரிமைகோரல்களை முழுமையாக விசாரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் லிங்க்ட்இன் அமைப்புகள் மீறப்பட்டதற்கான எந்த ஒரு தாக்கங்களையும் நாங்கள் காணவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Home