Friday, May 3, 2024
Home Blog Page 3

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இதன் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பில் 13 நாட்களேயான குழந்தை பால் புரைக்கேறி மரண

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு மாலை வேளையில், தாயார் பால் கொடுத்த போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது,

அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் : வடிவேல் சுரேஷ் !

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் : வடிவேல் சுரேஷ் !

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு வழங்க வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வெற்றிடங்கள் பரவலாக காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் ஊடாக 3,000 உதவி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்த போதிலும் தற்சமயம் உதவி ஆசிரியர்களாக சேவை புரிபவர்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைத்த பின்னரே புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு பொறிமுறை ஒன்றினூடாகவே இவ் நியமனங்களும் வழங்கப்பட வேண்டும். குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம்.

இ.போ.ச பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே மோதல்

இ.போ.ச பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே மோதல்

 

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்து தரிந்து நின்றுள்ளது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வருகை தந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

இதன் போது இரு பேரூந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேரூந்தின் லைட்ம் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச, தனியார் பேரூந்து ஆகிய இரு பேரூந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாமல் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கிறார்

0

நாமல் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கிறார்

நாமல் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கிறார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச, இலங்கையில் சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று SLPP கருதுகிறது.

“தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இது தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள், செய்திகள் அல்லது பதிவுகளுக்கு பொறுப்புக்கூறும் எந்தவொரு நபரும் இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

உத்தேச ஆன்லைன் பாதுகாப்பு மசோதா நாளை (ஜனவரி 24) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GMOA வேலைநிறுத்தத்தில் சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொள்கின்றனர்

GMOA வேலைநிறுத்தத்தில் சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொள்கின்றனர்

GMOA வேலைநிறுத்தத்தில் அரசின் DAT U-டர்ன் மீது சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொள்கின்றனர்

மருத்துவர்களுக்கான இடையூறு, கிடைக்கும் மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எதிராக, நாளை தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளை காலை 8.00 மணி முதல் அகில இலங்கை ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை ரூபாவால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், GMOA குற்றஞ்சாட்டியுள்ளது. 35,000 மற்றும் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து, நிதி அமைச்சகத்தின் சில அதிகாரிகள் அதை இடைநிறுத்த முயன்றனர்.

மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் முழு அறிக்கை;

சமூக ஊடகங்களில் ஆபாச படங்களும் சைபர் குற்றங்களும் பல மடங்காக அதிகரிப்பு

0

சமூக ஊடகங்களில் ஆபாச படங்களும் சைபர் குற்றங்களும் பல மடங்காக அதிகரிப்பு , இதற்காகத்தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் : டிரான் அலஸ்!

 

கடந்த வருடம் சமூகபடங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான நிர்வாணப்படங்கள் பரிமாறப்பட்டன என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் 8000சைபர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

2024 இன் முதல்வாரங்களி;ல் சமூக ஊடகங்களில் 500க்கும்மேற்பட்ட ஆபாசபடங்களை தங்களிடையே பரிமாறிக்கொண்டுள்ளனர் கடந்த வருடம் 6690 இணையவழி குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் டிரான்அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியினரால் பதியப்பட்டவை மாத்திரமே வெளிவராத சம்பவங்கள் பல இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கிளர்ச்சிகள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லைஎனவும் தெரிவித்துள்ளார்

GMOA நாளை முதல் பணிப்புறக்கணிப்பு !

GMOA நாளை முதல் பணிப்புறக்கணிப்பு !

நாளை (24) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்கு ஒருவர் சுட்டுக் கொ லை !

0

பிக்கு ஒருவர் சுட்டுக் கொ லை !

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய சிசிடிவி போக்குவரத்து அபராதம்: 125 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

புதிய சிசிடிவி போக்குவரத்து அபராதம்: 125 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

புதிய சிசிடிவி போக்குவரத்து அபராதம்: 125 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்புதிய சிசிடிவி போக்குவரத்து அபராதம்: 125 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்
ஜனவரி 23, 2024 காலை 11:45 க்கு

கொழும்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட CCTV கமரா முயற்சியின் மூலம் மொத்தம் 125 போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட நடவடிக்கையாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு நேற்று (ஜனவரி 22) அறிவுறுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் சிசிடிவி கமெரா முயற்சி நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதுடன், 33 இடங்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காவல்துறையின் கூற்றுப்படி, திட்டத்தின் முதல் நாளில் பதிவாகிய பல்வேறு போக்குவரத்து குற்றங்களில் லேன் மாறுதல் மற்றும் ஸ்டாப்-லைன் ஓட்டுநர் குற்றங்கள் அடங்கும்.